தாய்த் தமிழ்நாட்டின் தெற்கு எல்லையாம் குமரி மண்ணைக் காத்த முன்னவர்களில் முதன்மையான வீரர்!
திருவாங்கூர் சமஸ்தான காங்கிரசு கட்சியில் புரையோடியிருந்த இனவெறி, சாதிவெறி மேலாதிக்கத்தை எதிர்த்து, தமிழர் உரிமைகள் காக்க உருவான திருவாங்கூர் தமிழர் காங்கிரசில் இணைந்து போராடிய பெருந்தகை!
மக்களின் பேரன்பினாலும், பேராதரவினாலும் 1952ஆம் ஆண்டு சுயேட்சையாக திருவாங்கூர் – கொச்சி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இனவெறி தாண்டவமாடிய மலையாளச் சட்டமன்றத்தில், பட்டம் தாணு பிள்ளையின் கொடுங்கோன்மை அரசை எதிர்த்து முழங்கிய பெருந்தமிழர்!
புரட்சித்தீயைப் பற்றவைக்கும் பேருரைகளால் தமிழ் இளையோருக்கு இனவிடுதலை உணர்வூட்டிய புரட்சியாளர்!
‘குமரித்தந்தை’ தாத்தா மார்ஷல் நேசமணி போன்ற முன்னணித் தலைவர்கள் சிறைப்பட்ட காலத்தில் குமரி மண் மீட்புப் போராட்டத்தினைத் தடைபடாது தொடர்ந்து முன்னெடுத்த கட்டளை தளபதி!
11-08-1954 அன்று தமிழர் விடுதலை நாள் ஊர்வலத்தைத் தலைமையேற்று நடத்தி, காவல்துறை அடக்குமுறைகளுக்கும், தடியடிகளுக்கும் அடிபணியாமல் குருதி சிந்திப் போராடிய மாவீரர்!
‘தெற்கெல்லை மீட்புப் போராளி’ தாத்தா குஞ்சன் நாடார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி