'பார்க்கிங்' (PARKING) படத்தில் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி கதை மாந்தராகவே வாழ்ந்த, ஆகச்சிறந்த திரைக்கலைஞர் அன்பிற்குரிய அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களுக்கு இந்திய ஒன்றிய அரசின் சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த பெருமிதமும், பெருமகிழ்வும் அடைந்தேன்.
திரைக்கலைக்காகவே தம்மை முழுவதுமாய் அர்ப்பணித்து, தமிழின் தன்னிகரில்லா குணச்சித்திர நடிகராகத் திகழும் அண்ணன் எம்.எஸ்.பாஸ்கர் அவர்கள் தம்முடைய இயல்பான நடிப்பாற்றல் மூலம், மக்களை மகிழ்விக்கும் அளப்பரிய கலைத்தொண்டினைத் தொடர்ந்து புரிந்து, இன்னும் பற்பல உயரிய விருதுகள் வென்றுசாதனைப் படைக்க என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!



