க.எண்: 2025080750
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் நினைவிடத்தில் மலர்வணக்கம்தலைமை: செந்தமிழன் சீமான் நாள்: நிகழ்விடம்:
|
வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி வருகின்ற 01-09-2025 அன்று காலை 11 மணியளவில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி