நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் தமிழ்த்தேசிய தத்துவத்தின் ஆணிவேராக விளங்கும் அனைத்து உயிர்களுக்குமான உயிர்மநேய அரசியலின் ஒரு பகுதியாக, பேசும் திறனற்ற உயிர்களான மரங்களும், ஆடு-மாடுகளும் அழியாமல் பாதுகாக்கும் வகையில் அவற்றின் உயிர் மற்றும் உரிமை காக்க வீரியமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
ஆளுகின்ற திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் அவற்றுடன் கூட்டணி கணக்கிடும் இன்னபிற கட்சிகளும் தேர்தல் வருவதற்கு ஓராண்டு காலத்திற்கு முன்பே, மக்கள் நலன் சார்ந்த சிக்கல்களுக்குப் போராடுவதை முற்று முழுதாய் விடுத்து, மக்களை ஆடு-மாடு மந்தையென நினைத்து வாக்குகளைப் பறிப்பதற்கான பரப்புரைகளைத் தொடங்கிவிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியோ வாக்குரிமையற்ற ஆடு-மாடுகளுக்கும், மரங்களுக்கும், இன்னபிற உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றிடாத புதிய அரசியல் புரட்சியாகும்.
தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து அவர்கள் உற்றுநோக்கும் உன்னத அரசியலாக உயர்ந்துள்ள, நாம் தமிழர் கட்சியின் உயிர்மநேய அரசியலை அனைவரையும் போல தாமும் கவனித்ததோடு, அதன் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துக்கூறி வரவேற்று அறிக்கையும் வெளியிட்டு உளமார பாராட்டியுள்ள தேனி மண்ணின் மகன், இயற்கை ஆர்வலர் என் ஆருயிர் இளவல் வி.ப.ஜெயபிரதீப் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நன்றியும்!
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி