திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அடுத்துள்ள பொத்தூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் சங்கமம் நிகழ்வில், 05-07-2025 அன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி புகழ் வணக்கவுரை நிகழ்த்தினார்.