முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஸ்ரீசங்காரா தொலைக்காட்சியில் கடந்த ஏழு மாதங்களாக ‘தமிழ் எங்கள் உயிர்மெய்’…

0

ஸ்ரீசங்காரா தொலைக்காட்சியில் கடந்த ஏழு மாதங்களாக 'தமிழ் எங்கள் உயிர்மெய்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமியர் பங்குபெற்ற மாபெரும் பேச்சுப் போட்டியின் இறுதிச்சுற்றில் தம்மோடு சேர்த்து ஆறு குழந்தைகளுடன் மேடையேறிய, நாம் தமிழர் கட்சியின்மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி புதுகை கு.ஜெயசீலன் அவர்களின் அன்புமகன் அதியன் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ள செய்தியறிந்து பெருமிதமும், பேருவுவகையும் அடைகிறேன்.

அன்புமகன் அதியன் அவர்கள் பேச்சாற்றலில் தனக்கிருக்கும் தனித்திறனையும், அன்னைத்தமிழ் மீதுள்ள மொழியாளுமையையும் மேன்மேலும் வளர்த்துக்கொண்டு இன்னும் பல வெற்றிகளைக் குவிக்கவும், வாழ்வினில் சிறக்கவும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி, தகவல்…
அடுத்த செய்திஸ்ரீசங்காரா தொலைக்காட்சியில் கடந்த ஏழு மாதங்களாக ‘தமிழ் எங்கள் உயிர்மெய்’…