நாம் தமிழர் கட்சி – சென்னை எழும்பூர் மண்டலத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி ஆவின் பிரகாஷ் அவர்களின் தாயார் சிவகாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தாயை இழந்துவாடும் அன்புத்தம்பி ஆவின் பிரகாஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
அம்மா சிவகாமி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



