முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர், கண் மருத்துவப்…

0

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர், கண் மருத்துவப் பேராசிரியர் பெருமதிப்பிற்குரிய ஐயா நம்பெருமாள்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது.

வயோதிகத்தால் பார்வை திறன் குறைந்த பல இலட்சக்கணக்கான முதியவர்களின் துயரந்தோய்ந்த கொடுவாழ்வினை தலைகீழாக மாற்றி, அவர்களின் கண்களுக்கு மீண்டும் ஒளியூட்டி வழிகாட்டி வாழ்வித்த புரட்சியாளர்
ஐயா நம்பெருமாள்சாமி அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நிகழ்ந்துள்ள ஈடு செய்யவியலாப் பேரிழப்பாகும்.

ஐயா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும், அவருடைய அருந்தொண்டால் அமையப்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனையின் மூலம் ஒளிபெற்ற ஒவ்வொரு விழியின் வழியே, என்றென்றும் நம்மை விட்டு நீங்காது நிலைத்திருப்பார்கள்!

ஐயா மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

போற்றுதற்குரிய பெருந்தகை கண் மருத்துவப் பேராசிரியர் நம்பெருமாள்சாமி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர், கண் மருத்துவப்…
அடுத்த செய்திதமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்,…