சென்னை வளரவாக்கத்தைச் சேர்ந்த, நம்மாழ்வார் குத்தூசி மருத்துவ நிலைய நிறுவனர் அன்பிற்கினிய சகோதரர் அப்துல் ஹலீம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
தமிழ்த்தேசிய அரசியல் மீதும், நாம் தமிழர் கட்சி மீதும் பெரும்பற்றுகொண்டு நேசித்து நின்ற சகோதரர் அப்துல் ஹலீம் அவர்கள், தனிப்பட்ட முறையில் என் மீது பெரும் பாசமும் அக்கறையும் கொண்ட பேரன்புக்காரராவார்.
அவருடைய மறைவு இயற்கை மருத்துவம், இயற்கை உணவு உள்ளிட்ட மண் சார்ந்த, மரபு சார்ந்த தமிழ்த்தேசிய பண்பாட்டுக் கூறுகள் மீதான ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.
சகோதரர் அப்துல் ஹலீம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
அன்புச்சகோதரர் அப்துல் ஹலீம் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



