முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..! உலக இசை வரிசையில்…

0

இசை என்கிற பேராற்றலின் மனித வடிவம்..!
உலக இசை வரிசையில் தமிழுக்கு முகவரி பெற்றுத் தந்த தனித்துவம்..!

தேனி மலைச்சரிவில் ஒளிந்திருக்கும் சிற்றூரில் பிறந்து இன்று உலகத்திற்கே இன்னிசை புகட்டும் எங்களது இசை இறைவன்..!

பசியில் கிடந்து பரிதவித்து தனிமையில் தவித்திருக்கும் பொழுதினை, தோல்வியின் வலி துவண்டு இருக்கும் மனிதனை, மனித வாழ்வில் எங்கிருந்தோ வந்து தொற்றும் துயரில் உடைந்து போகும் மனதினை, காதலால் கசிந்து உருகும் விழிகளை, அன்பால் நெகிழ்ந்து உறையும் ஆன்மாவை,
இசை என்ற இன்ப உலகிற்குள் தனது ராகங்களின் சிறகுகளால் காற்றில் மிதந்தபடி, கை பிடித்து அழைத்துச் செல்லும் எங்கள் ஐயா இளையராஜா, மனித உணர்ச்சிகளுக்கு இசை வடிவம் கொடுத்த இசைக் கடவுள்!

தம் கைவிரல் மீட்டிய பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களால் இசை என்ற பெரும் ஞானத்தை உலகத்திற்கே போதிக்கும் இசைஞானத்தின் போதிமரம்!

தமிழினத்தின் பெருமைமிக்க உலக அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலனுடனும், உள நிறைவுடனும் மகிழ்வாக வாழ்ந்து, இன்னும்… இன்னும்… அவருக்குள்ளாகச் சுரந்துக் கொண்டே இருக்கும் வற்றா இசை அமுதத்தை வாரி வழங்கி, எங்கள் வாழ்வினை அவரது இசை அருளால் நிறைக்க வேண்டும் என அவரது பிறந்த நாளில் உளமார வாழ்த்துகிறேன்.

ஈடு இணையற்ற இசை மேதை, இசை இறைவன் இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

முந்தைய செய்திமுறையற்ற சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிடமாற்ற உத்தரவை திமுக அரசு…
அடுத்த செய்திசிறைத்துறை முதல்நிலை காவலர்களின் முறையற்ற பணியிடமாற்ற உத்தரவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்