தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநிலத் துணைச்செயலாளர் அன்புத்தம்பி சண்.மணிமாறன் அவர்களின் தந்தை ஐயா உ.சண்முகசுந்தரம் அவர்களுக்கு மூளையில் கட்டி காரணமாக அண்மையில் செய்யப்பட்ட உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையின் போது ஒரு பகுதி மண்டை ஓடு நீக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் செய்தியறிந்துமிகுந்த வேதனையுற்றேன்.
அன்புத்தம்பி சண்.மணிமாறன் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது தந்தையின் உயிர் காக்கும் மருத்துவச் செலவுகளுக்காக அவரது குடும்பத்தினர் கட்சி உறவுகளிடத்தில் உதவி கோரியுள்ளனர்.
தற்போது ஐயா சண்முகசுந்தரம் அவர்களுக்கு அகற்றப்பட்ட அந்த மண்டை ஓடு பகுதியைச் சரிசெய்ய Craniplasty என்ற முக்கிய அறுவை சிகிச்சைக்காக போதிய நிதியில்லாமல் அன்புத்தம்பி சண்.மணிமாறனும் அவரது குடும்பத்தினரும் அவதியுறுகின்றனர்.
உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கு இதுவரையிலும் இலட்சக்கணக்கில் செலவாகியுள்ளது எனவும், மேற்கொண்டு 4 இலட்சம் ரூபாய் வரை தேவைப்படுவதால், உலகெங்கும் பரவிவாழும் தாய்த்தமிழ் உறவுகளும், பொருளாதார வலிமைப்படைத்த நல்ல உள்ளங்களும், தங்களால் இயன்ற தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள தம்பி சண்.மணிமாறன் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி அவரது தந்தையின் உயிர்காக்க உதவிடுமாறு வேண்டுகிறேன்.
வங்கி கணக்கு விவரம்:
பெயர் : மணிமாறன் (Manimaran)
வங்கி கணக்கு எண் : 096101000017083
வங்கியின் பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ( IOB Chakkarapalli Branch )
IFSC: IOBA0000961
G Pay UPI & தொடர்புக்கு: +91-9047903455





