தமக்கு சொந்தமான 620 ஏக்கர் நிலங்களை இந்திய அரசிற்கு தானமாகக் கொடுத்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் உருவாக அடித்தளமிட்ட பெருந்தமிழர்..!
சேலம்-கடலூர் தொடர்வண்டி பாதை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியபோது இந்திய ஒன்றிய அரசு குறைந்தபட்சம் ஒரு ஆண்டிற்கு தினமும் 50 நபர்கள் கடலூர்-சேலம் பேருந்து போக்குவரத்தில் இருந்தால்தான் சேலம்-கடலூர் தொடர்வண்டிப் பாதை அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்றுகூறி கைவிரித்த நிலையில், சேலம் கடலூர் தொடர்வண்டி பாதை உருவானால் இரு மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று கருதிய ஜெம்புலிங்கனார், தம்முடைய தோட்டத்தில் வேலை செய்யும் 50 தொழிலாளர்களை தம் சொந்த செலவில் ஒரு ஆண்டிற்கு தினமும் சேலம்-கடலூர் பாதையில் பேருந்தில் பயணிக்க வைத்து சேலம்-கடலூர் தொடர்வண்டி பாதை திட்டத்தைப் பெற்றுத்தந்த பெருந்தகை,
ஆங்கிலேயே அரசால் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில சமூகங்களின் மீது போடப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போராடி திரும்பப்பெறச் செய்த சமூகப்போராளி..!
குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களை, அன்றைய வட தமிழ்நாட்டின் தென்னாற்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்றொரு பகுதியை உருவாக்கி அடைத்து வைத்து ஆங்கிலேய அரசு கொடுமைப்படுத்திய நிலையில், கைதாகி அடைக்கப்பட்டிருந்த மக்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தந்த மனிதநேயர்..!
20 ஆண்டுகள் நெல்லிக்குப்பம் பேரூராட்சித் தலைவர், கடலுர் நகராட்சி உறுப்பினர், துணைத்தலைவர், தலைவர், தென்னாற்காடு மாவட்ட மன்றத் தலைவர், தென் ஆற்காடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயற்குழு உறுப்பினர் மற்றும் இயக்குநர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர், தென் ஆற்காடு மாவட்ட இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் கடலூரின் மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழுத் தலைவர், நெல்லிகுப்பம் கூட்டுறவு மேற்பார்வை ஒன்றியத் தலைவர், தென் ஆற்காடு மாவட்ட தொழுநோய் மருத்துவ வாரியத் துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து தன்னலமற்ற பொதுவாழ்வில் சிறப்புற மக்கள் தொண்டாற்றிய மாமனிதர்..!
போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ஜெம்புலிங்க முதலியார் பெரும்புகழ் போற்றுவோம்!
#நாம்தாமிழர்
– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தாமிழர்கட்சி