இனிய ஈகைத் திருநாள் – 2025 – சீமான் வாழ்த்து!

14

“அறிவு இறைவனின் உறைவிடத்தைத் தேடுகிறது, அன்பு இறைவனின் உறைவிடமாகிறது, இப்பூவுலகில் நீங்கள் தரும் ஈகைதான் உண்மையான செல்வம்!”

“பூமியில் உள்ள உயிர்களிடம் நீங்கள் கருணை கொண்டால், விண்ணில் உள்ள இறைவன் உங்களிடம் கருணை கொள்வார்”

என்ற இறைதூதர் நபி பெருமானரின் அருள்மொழியின் வழிநடந்து, உள்ளன்போடு இறைவனை வணங்கி, மனநிறைவோடு வறியவர்களுக்கு உதவி, ஈகைத்திருநாளாம் பக்ரீத் பெருவிழாவினைக் கொண்டாடும் என்னுடைய பேரன்பிற்குரிய இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

அளவற்ற அன்பாளனும், நிகரற்ற அருளாளனுமாகிய ஏக இறைவன் அல்லாவின் பேரருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மதுரை வடக்கு மண்டலம் (மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் ஒரத்தநாடு மண்டலம் (தஞ்சாவூர் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்