முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என் அன்புத்தம்பி விமலேந்திரன் பாரதிதாஸ் அவர்கள் எழுதி, தம்பி சித்தன்…

0

என் அன்புத்தம்பி விமலேந்திரன் பாரதிதாஸ் அவர்கள் எழுதி, தம்பி சித்தன் ஜெயமூர்த்தி அவர்கள் இசை அமைத்துப் பாடி, செயற்கை நுண்ணறிவுக் கலைஞர் இராஜ மாணிக்கம் நெப்போலியன் அவர்களின் காணொளி உருவாக்கத்தில், மண்பாடு கலையகத்தால் தயாரிக்கப்பட்டு காந்தம் ஊடகத்தில் வெளியாகும் “அன்பின் பேருருவம் அம்மம்மா“ எனும் பாடலை வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.

நம் குடும்பங்களில் ஆணிவேராக இருந்து நம்மை தாங்கி நிற்கும் குலதெய்வங்களான அப்பத்தா, அம்மம்மா, அப்பாச்சி, அப்பம்மா, பாட்டிமார்களின் நினைவுகளைப் போற்றும் இப்பாடல் உருவாக்கத்திற்கு உழைத்த அனைத்து உறவுகளுக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!

தலைமுறைகளுக்கிடையேயான உறவுகளின் பாசப்பிணைப்பை உருக்கமாக பதிவு செய்திருக்கும் இப்பாடலுக்கு தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் பேராதரவு நல்கிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

https://t.co/QhnP9J0xJq

முந்தைய செய்திஅன்னையர் நாள் நல் வாழ்த்துகள்! – சீமான்
அடுத்த செய்திதமிழ் இனம், மொழியின் மீதான தீராக்காதலால் தமிழ்த்தேசிய அரசியலில் பெரும்பற்றுக்கொண்டு,…