தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு கலை அடையாளமாகத் திகழும் மாபெரும் இலக்கியப் பேராளுமை முத்தமிழ்ப்பேரறிஞர் பெருமதிப்பிற்குரிய ஐயா வைரமுத்து அவர்களின் தாயார் அம்மா அங்கம்மாள் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். பெற்றெடுத்த அன்னையை இழந்து வாடும் ஐயாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்' – எனும் தமிழ்மறை திருக்குறளின் உயிர்மொழிக்கேற்ப, தான் ஈன்றெடுத்த அன்பு மகனைச் சான்றோன் எனக் கேட்ட அருமைத்தாய் அங்கம்மாள் அவர்களது மறைவு ஈடு இணையற்றதாகும்.
ஆருயிர் தாயை இழந்துவிட்டு, பெருந்துயரில் வாடும் ஐயா வைரமுத்து அவர்கள் மீண்டுவர துணை நிற்கிறேன்.
அம்மா அங்கம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
@Vairamuthu



