முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேச விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுமைக்கும் அரும்பெரும் ஈகங்களைச் செய்து…

0

தமிழ்த்தேச விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுமைக்கும் அரும்பெரும் ஈகங்களைச் செய்து போராடிய தமிழ்த்தேசியப் போராளி!

சாதி ஒழிப்பைப் பேசியதோடு மட்டுமல்லாது, அதன்படியே வாழ்ந்து காட்டி, தமிழர் ஓர்மையே வலிமை என்பதை உரைத்த பெருந்தமிழர்!

மக்களை அரசியல்படுத்தி, அணிதிரட்டாது எந்தவொரு புரட்சியும் வெல்லாது எனும் ஒப்பற்ற தத்துவத்தைப் போதித்து, தனது வாழ்க்கையையே தமிழ்த்தலைமுறைக்கான பாடமாக விட்டுச் சென்றிருக்கிற பேராசான்!

பூமிப்பந்தில் தமிழர்களுக்கென ஒரு தேசம் வேண்டுமெனும் பெருங்கனவு கொண்டு, அதற்காக பெரும் இழப்புகளையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, தமிழ்ப்பேரினத்திற்காக அயராது உழைத்த எங்கள் பெருமைமிகு முன்னவர்!

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் பெரிதும் மதித்துப் போற்றப்பட்ட பெருந்தகை! அண்ணன் தமிழரசன் அவர்களுக்கு வழிகாட்டிய முன்னத்திஏர்!

இன விடுதலையோடு, சாதிய வேறுபாடுகளற்ற சமூக விடுதலைக்கும், ஏழை, பணக்காரர் எனும் பாகுபாடற்ற வர்க்க விடுதலைக்குமாகக் களம் கண்ட மகத்தான மக்கள் தலைவர்!

மக்கள் துணையுடன் மரணத்தை வென்ற மாமனிதர்!

தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி!
நம்முடைய தாத்தா புலவர் கு.கலியபெருமாள்
அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல்! – சீமான் வரவேற்பு
அடுத்த செய்திஉயிருக்கினிய உறவுகள் அனைவருக்கும் அன்பும், வணக்கமும்! வருகிற வைகாசி 4…