முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய தலைசிறந்த எழுத்தாளரும், இளைய தலைமுறை…

0

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய தலைசிறந்த எழுத்தாளரும், இளைய தலைமுறை மத்தியில் தன்னம்பிக்கையை விதைத்து, நல்வழி காட்டும் ஆகச்சிறந்தப் பேச்சாளரும், தமிழ்ச்சமூகத்தின் மீது பற்று கொண்ட சிந்தனையாளரும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணிபுரிந்த நேர்மை மிகுந்த நிர்வாகியும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான பெருமதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களின் தந்தையார் அப்பா வெங்கடாச்சலம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் ஐயா இறையன்பு அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அப்பா வெங்கடாச்சலம் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

முந்தைய செய்திபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருச்சி திருவரங்கம் மண்டலம் (திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்