முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பருத்திப்பாடு…

0

நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பருத்திப்பாடு ஊராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி மு.முனியாண்டி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி வரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, அயராது களப்பணியாற்றி வந்த மு.முனியாண்டி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்திருப்பது ஆற்ற முடியாதப் பேரிழப்பாகும்.

அன்புத்தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி மு.முனியாண்டி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராணிப்பேட்டை மண்டலம் (இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள தூய்மைப்பொறியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி,…