முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இத்திட்டத்திற்கானக் கருத்துகேட்புக் கூட்டம் எப்போது நடத்தப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி…

0

இத்திட்டத்திற்கானக் கருத்துகேட்புக் கூட்டம் எப்போது நடத்தப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களின் குரலாய் பங்கேற்று, திட்டத்தினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தக் கருத்துகளைப் பதிவு செய்வார்கள் என்றாலும் இதனைத் தடுக்கக்கூடிய அதிகாரம் படைத்த அரசுகள் இத்திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து தற்போதே செயல்பட வேண்டும். இத்தகைய அழிவுத் திட்டத்தினை மக்கள் மீதும் இயற்கையின் மீதும் திணிக்க முற்படும் திமுக அரசு, மேடைகளில் பருவநிலை மாற்றம் குறித்து பேசினால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா? சூழலியல் பாதுகாப்பு குறித்து வெற்றுச் சொற்களை மட்டுமே உதிர்த்து, தனது ஆட்சியை முடிக்கப்போகும் திமுகவின் ஆட்சி காலம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்கள் மட்டுமே நிறைந்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரக் கூடிய அழிவுத் திட்டங்களுக்கும் போதிய அனுமதிகளை வழங்கித் துணையாய் செயல்பட்டு வருவதன் வழியே, பாஜகவும் திமுகவும் இயற்கைக்கு எதிரான முதலாளித்துவக் கோட்பாட்டில் ஒரே அணியாய் நிற்கின்றனர். இனியாவது தன்னுடைய சூழலியல் அழிவுப் போக்கினைக் கைவிட்டு, நீலகிரி மாவட்டம் சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்தினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

(2/2)

முந்தைய செய்திநீலகிரி மாவட்டம், சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்திற்காக மார்ச் 20ஆம்…
அடுத்த செய்திபார்வை மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்