அன்புமகள் தேவதர்ஷினி நீட் தேர்வினால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை!

5

சென்னை ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்புமகள் தேவதர்ஷினி இருமுறை நீட் தேர்வு எழுதியும் தேர்வில் வெற்றிபெற முடியாமல், மூன்றாவது முறை தேர்வெழுதவிருந்த நிலையில், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

பாசிச பாஜக அரசு நீட் தேர்வை நீக்க மறுப்பது வர்ணாசிரமக் கொடுமையின் நவீன வடிவமேயாகும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்ற பொய் வாக்குறுதியை அளித்து அதிகாரத்தில் அமர்ந்த திமுக அரசு இன்னும் எத்தனை மாணவ-மாணவியரின் உயிரை பலி கொடுக்கவுள்ளது?

நீட் தேர்வினால் மாணவ-மாணவியர் உயிரிழப்பது வெறும் தற்கொலை அல்ல; அவை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசும் இணைந்து செய்யும் பச்சைப் படுகொலைகள். இந்த ஆட்சிகளை அகற்றாத வரை நீட் தேர்வை ஒழிக்கவும் முடியாது. நீட் தேர்வை ஒழிக்காதவரை இதுபோன்ற படுகொலைகளைத் தடுக்கவும் முடியாது.

https://x.com/Seeman4TN/status/1905956675653423517

* செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்