முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு…

0

உலகெங்கும் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கியே நீர் பாயும் என்ற இயல்புக்கு மாறாக, பள்ளத்திலிருந்தும் மேடான பகுதிக்கும் நீர் செல்லும் பாதையை உருவாக்க முடியும் என்பதை தம்முடைய நுண்ணறிவால் உணர்ந்து அறிவியல் வளர்ச்சியுறாத காலத்திலேயே பாம்பு வளைந்து நெளிந்து செல்வது போல் கால்வாய் வெட்டி காவிரியின் துணை ஆறுகளான பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைத்து, உலகம் வியக்க கீழிலிருந்து மேலாக நீரைத் திருப்பி, வறண்டு கிடந்த ஈரோடை மண்டலத்தை பொன் விளையும் பூமியாக, பயிர் செழித்து உயிர் செழிக்கும் தாய்நிலமாக மாற்றிய பெரும்பாட்டன்!

மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்திட, பத்தாண்டுகள் அரும்பாடுபட்டு, காலத்தை வென்று நிற்கும் நீர் கால்வாயை ஏற்படுத்திவிட்டு, தன்னலம் சிறிதுமற்று தானும் தன் குடும்பமும் வறட்சியான ஊத்துக்குளி பகுதியில் குடியேறி ஆட்சி செய்து, மன்னராட்சி காலத்திலேயே பொதுவாழ்வில் புரட்சிசெய்த பேரரசர்!

'முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும், என்ற தமிழ்மறை தந்த வள்ளுவப்பெருமகனாரின் வாக்கிற்கு இணங்க, நூற்றாண்டுகள் பல கடந்தபின்னும் இன்றளவும் கொங்கு பகுதி மக்களால் போற்றி வணங்கப்படும் மாமன்னர் காலிங்கராயரின் பெரும்புகழ்ப் போற்றுவோம்!

மாமன்னர் காலிங்கராயருக்கு பெருமிதத்தோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பேராவூரணி கட்சி மாவட்டப் பொருளாளர்…
அடுத்த செய்திவீரத்தையும், மானத்தையும் உயிரெனக் கொண்டு, போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் வளர்த்தெடுக்கும்…