நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மாவட்டம், முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் பாசறையின் மாவட்டத் துணைத்தலைவர் அன்புத்தம்பி தங்கத்துரை அவர்களின் தந்தை நடேசன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி தங்கத்துரை அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் கட்சி சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா நடேசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



