நாம் தமிழர் கட்சி – திண்டிவனம் தொகுதிப் பொறுப்பாளரும், செந்தமிழர் பாசறை – ஓமன் மகளிர் பாசறை இணைச் செயலாளர் அன்புத்தங்கை சண்மதிப்பிரியா அவர்களின் தந்தையும், ஓமன் செயலாளர் சந்திரசேகர் அவர்களின் மாமனாருமான மதிப்பிற்குரிய ஐயா இராஜ் மகேஷ் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, களப்பணியாற்றிவந்த ஐயா இராஜ் மகேஷ் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் அன்புத்தங்கை சண்மதிப்பிரியா அவர்களுக்கும், அன்புத்தம்பி சந்திரசேகர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா இராஜ் மகேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



