நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி, கஸ்தம்பாடி ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி ஏ.பூவரசன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணுக்கும், மக்களுக்குமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த அன்புத்தம்பி பூவரசன் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி ஏ.பூவரசன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



