நாம் தமிழர் கட்சி – ஆவடி தொகுதியின் வழக்கறிஞர் பாசறைச் செயலாளர் ஐயா ராசாமணி அவர்களின் மனைவியும், ஆவடி தொகுதியின் கையூட்டு – ஊழல் ஒழிப்புப் பாசறைச் செயலாளருமான அன்புத்தங்கை வழக்கறிஞர் ந.சீலாதேவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
பெண்கள் பங்கேற்காத எந்தப் போராட்டமும், எந்தப் புரட்சியும், எந்த இயக்கமும் வென்றதாக வரலாற்றில் செய்தி இல்லை. 'ஆணும், பெண்ணும் சமம்!' என்ற தத்துவநிலைப்பாட்டில், 'பெண்களைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்! என்ற முழக்கத்தை ஏந்தி, புரட்சிகர அரசியலை முன்னெடுத்துவரும் நாம் தமிழர் கட்சியில் இணைந்து, சிறப்பாகச் களப்பணியாற்றி வந்த தங்கை சீலாதேவியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது உயிர்த்துணையை இழந்து வாடும் ஐயா ராசாமணி அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தங்கை சீலாதேவி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



