முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

“இசைப்பாடலிலே என் உயிர் துடிப்பு! நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!…

0

“இசைப்பாடலிலே என் உயிர் துடிப்பு!
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு!
காவியத்தாயின் இளையமகன்!
காதல் பெண்களின் பெருந்தலைவன்!
மானிட சாதியில் தனி மனிதன்!
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்!”

கவிஞன் இவன் ஒரு காலக் கணிதம்!
இறந்தும் இறவா இலக்கியம்!
ஈடுஇணையற்ற இசைப்பாக்களின் அரசு!
இசையோடு தமிழமுது கலந்து தத்துவப்பால் ஊட்டிய தாய்!
அவர் பாட்டில், அவர் தாலாட்டில் மயங்காத தமிழர் எவருமில்லை!
அந்த மாபெரும் கவிக்கு நன்றியுணர்வோடு வணக்கம் செலுத்துவது நம் கடமை!
தமிழினத்தின் பெருமைமிகு இலக்கிய அடையாளம்!

நமது ஐயா கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்குப் பெருமையோடு
நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திதமிழினத்தின் உயர்வுக்காகவும், தமிழர்களின் நலவாழ்வுக்காகவும் தனது வாழ்வையே முழுவதுமாக ஒப்படைத்துக்கொண்டு,…
அடுத்த செய்திதமிழர் பெரும்பாட்டன் இராவணன் அவமதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது! ஆஸ்திரேலிய…