முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி மோ.வாசுதேவன் அவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, தகவல் தொழில்நுட்பப் பாசறையில் துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி வாசுதேவன் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி மோ.வாசுதேவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிருச்சி: இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி, தொடர்ந்து மிரட்டி…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி தொகுதி, கோட்டூர் கிழக்கு…