முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாநில உரிமைக்கு எதிராகவும், சூழலியல் பாதுகாப்பினை நீர்த்துப் போகச் செய்யும்…

0

மாநில உரிமைக்கு எதிராகவும், சூழலியல் பாதுகாப்பினை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும் ஒன்றிய அரசினால் கொண்டு வரப்பட்டுள்ள காற்று (மாசுபாடு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் நீர் (மாசுபாடு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 ஆகியவற்றின் சட்டதிருத்தம் 2024ஐ எதிர்த்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகளுக்கு நான் எனது கருத்தினை மின்னஞ்சலாக அனுப்பிவிட்டேன்.

பொதுமக்கள் கருத்துப் பதிவு செய்வதற்கான கால வரையறை வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கெதிராக எளிமையாகத் தங்கள் கருத்தினைப் பதிவிட கீழுள்ள இணைப்பினைச் சொடுக்கி தானியங்கி மின்னஞ்சல் அனுப்பிடுமாறு உறவுகள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

தானியங்கி மின்னஞ்சல் அனுப்பும் இணைப்பு:
https://t.co/WUAjkpO9WY

பொதுமக்களின் கருத்துகளை ஏற்று இச்சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசினை வலியுறுத்துவதோடு, இச்சட்ட திருத்தத்திற்கெதிராகத் தன்னுடைய நிலைப்பாட்டினை ஒன்றிய அரசிடம் உறுதியாக பதிவு செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு அரசினையும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

@byadavbjp @moefcc @PMOIndia @narendramodi @mkstalin @SMeyyanathan

முந்தைய செய்திமதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
அடுத்த செய்தி“வென்றாக வேண்டும் தமிழ்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!