நாம் தமிழர் கட்சி – சென்னை மாவட்டம், திரு.வி.க.நகர் தொகுதி, 73வது வட்டத்தைச் சேர்ந்த தொழிற்ச் சங்கப் பேரவையின் மாவட்டத் துணைத்தலைவர் அன்புச்சகோதரர் மு.பாஸ்கரன் அவர்களின் வாழ்விணையர் ஜெயசுதா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
உற்ற துணையை இழந்து வாடும் சகோதரர் பாஸ்கரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரி ஜெயசுதா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



