முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட…

0

திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட என் ஆருயிர் இளவல் இரவிவர்மன் அவர்கள் பொன்னியின் செல்வன்-1 படத்தின் ஆகச்சிறந்த ஒளிப்பதிவுக்காக இந்திய ஒன்றிய அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை வென்றுள்ள செய்தி மிகுந்த பெருமிதமும், பேருவுவகையும் அளிக்கிறது.

@dop_ravivarman

அன்புத்தம்பியின் வியக்க வைக்கும் கலைத்திறனை அருகிலிருந்து பார்த்து ரசித்துள்ளேன். அந்நியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் என தான் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் காட்சியின் அழகியலை நம் கண்முன்னே கொண்டுவந்து நம்மைப் படத்தோடு ஒன்றச்செய்த திறன்மிக்கப் படைப்பாளி!

பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் கலைப்பார்வை கொண்டு உணர்வுப்பூர்வமாக அவர் தந்த ஒவ்வொரு காட்சியின் மூலமும் சோழர் காலத்திற்கே நம்மை இட்டுச்சென்றவர்.
காலந்தாழ்ந்து கிடைத்தபோதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல்வேறு மொழித்திரைப்படங்களில் பல ஆண்டுகளாக மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடன்பணியாற்றிய தம்பி ரவிவர்மனின் ஈடு இணையற்ற அயராத கடின உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதியாகவே இவ்விருதினைக் கருதுகிறேன்.

அன்புத்தம்பி ரவிவர்மன் அவர்கள் மக்களின் மனம்மகிழ, மென்மேலும் கலைத்தொண்டு புரிந்து சாதனை பல படைத்திட என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!

முந்தைய செய்திபொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னத இசை…
அடுத்த செய்திகொல்கத்தாவைச் சேர்ந்த முதுகலை பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல்…