முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு. என்கிறது…

0

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல
வினைக்கரிய யாவுள காப்பு.

என்கிறது தமிழர் மறை. செயற்கரிய செயலாகிய நட்பு கொள்ளுதல் மானுட குணத்தின் உச்ச மாண்பு. நட்பினால் இதயம் இணைந்து மனிதம் மலர்ந்து உயிரில் நிறையும் உறவே காலம் தாண்டியும் நிற்கும் கனிவின் கல்வெட்டு.

தோழமைகளால் தோற்றவர்கள் யாருமில்லை. நட்பினால் தோள் இணைந்தவர்கள் வெல்லாத பேறுமில்லை.

தமிழ் மரபில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் தொடங்கி,
புரட்சியின் புதல்வர்கள் சே குவேரா – பிடல் காஸ்ட்ரோ, நடிப்பில் லாரல் – ஹார்டி, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்தி என நட்பினால் இணைந்து இலக்கணமானவர்கள் ஏராளம்.

நட்பினால் ஆனது உலகு.

இதய வயல்களில்
நட்பின் நாற்றங்கால் நட்டு
அன்பின் செழிப்பை
அறுவடை செய்யும்
அனைவருக்கும்..

நட்பு தின வாழ்த்துகள்!

#HappyFriendshipDay2024

முந்தைய செய்திதமிழ்நாட்டிற்குத் தஞ்சம் தேடி வந்த ஈழத்தமிழர்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி…
அடுத்த செய்திதமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் படுகொலைகள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு, மின்கட்டண உயர்வு…