முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பண்ணைப்புரம் தந்த பைந்தமிழ் பாட்டிசை வேந்தன்! எட்டுத்திக்கும் சென்று தித்திக்கும்…

0

பண்ணைப்புரம் தந்த
பைந்தமிழ் பாட்டிசை வேந்தன்!
எட்டுத்திக்கும் சென்று
தித்திக்கும் தேனிசையால்
திசையெல்லாம் தீந்தமிழாய் நிலைத்தவர்..!

உறக்கமற்ற இரவுகளில்
தன் தங்க இசையால்
தரணி எல்லாம் பரந்து வாழும்
மிழருக்குத் தாலாட்டு பாடி
தாய்மையின் கருவறையைத்
தன் இசை சுரத்தில் சுமப்பவர்..!

அன்னக்கிளி முதல் ஹங்கேரி வரை
கட்டற்ற காட்டருவி போல
உள்ளத்தை தொட்டு உருக்கும்
உயிர் இசையை அள்ளி அள்ளி தந்த
தமிழிசையின் உலக அடையாளம்..!

தமிழரின் பெருமை!

இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

பூமி சுற்றாமல் போகலாம்!
அலையும் காற்று அணைந்து கூட உறையலாம்!
சுட்டெரிக்கும் தீ சுடாமல் மாறலாம்!
கடலலை ஓய்ந்து குளம் போல தேங்கலாம்!

ஆனால்…
இன்னிசை சுமக்கும் உங்கள் உள்ளம்
எங்களுக்காக நல்லிசை பொழிய மறக்காது!

உலகத்து கடைசி மாந்தன் உலவும் வரை உங்களிசை நிற்காது..!
அவனுக்கும் துணையாகி,
அகிலத்தில் என்றும் அழிவின்றி நிலைத்திருக்கும்!

வாழ்க..! வாழ்க..!

முந்தைய செய்திதமிழ்நாட்டின் தெற்கெல்லை மீட்பர்! குமரித் தந்தை நமது ஐயா மார்ஷல்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்றத்…