நாம் தமிழர் கட்சி – சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதி, மாதவச்சேரி ஊரைச் சேர்ந்த பகரைன் செந்தமிழ் பாசறைப் பொருளாளர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களின் தாயார் இரா.செல்வராணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து தாங்கொணாத் துயரமடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத்துயரத்தில் நானும் முழுமையாகப் பங்கெடுக்கிறேன்.
அம்மா இரா.செல்வராணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



