நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேற்கு ஒன்றியத் துணைத் தலைவர் அன்புத்தம்பி விஷ்ணு அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, களப்பணியாற்றிவந்த அன்புத்தம்பியை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி விஷ்ணு அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி விஷ்ணு அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



