முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத்…

0

நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, அஞ்செட்டி ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி கோ.மாதேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி மாதேஷ் அவர்களை இளவயதிலேயே இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி கோ.மாதேஷ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வே.செல்வம்…
அடுத்த செய்திஇசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி…