முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மதுரை உசிலம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி…

0

நாம் தமிழர் கட்சியின் மதுரை உசிலம்பட்டி மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி இள.மகாதேவன் அவர்களின் அன்புமகள் யாழிசை அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

உயிரினும் மேலாக நேசித்து, பாராட்டி சீராட்டி வளர்த்த அன்புமகளை சிறு வயதிலேயே பறிகொடுப்பது என்பது எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

பாசமிகு மகளை இழந்து தவிக்கும் அன்புத்தம்பி மகாதேவன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அன்புமகள் யாழிசை அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர தமிழ்நாடு அரசு விரைந்து…
அடுத்த செய்திபாஜகவின் புதிய கல்விக்கொள்கையான ஸ்ரீ பள்ளி திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி…