முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் கிழக்கு தொகுதியைச் சேர்ந்த கடம்பாடி…

0

நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் கிழக்கு தொகுதியைச் சேர்ந்த கடம்பாடி கிளைத் துணைத்தலைவர் அன்புத்தங்கை வளர்மதி அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பெண் விடுதலை இல்லையேல்; மண் விடுதலை இல்லை என்ற தமிழ்த்தேசியத்தலைவரின் கூற்றுக்கிணங்க ஆணும், பெண்ணும் சமம் என்ற தத்துவநிலைப்பாட்டில் புரட்சிகர அரசியலை முன்னெடுத்துவரும் நாம் தமிழர் கட்சியில் இணைந்து, சிறப்பாகச் செயற்பட்டுவந்த தங்கை வளர்மதி அவர்களது மறைவு மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தங்கையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தங்கை வளர்மதி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதுயர் பகிர்வு: ஆரல்வாய்மொழி பேரூராட்சியைச் சேர்ந்த ச.பாலேந்திரன் மறைவு – குடும்பத்தினருக்கு சீமான் ஆறுதல்
அடுத்த செய்திதிருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின்…