முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப்…

0

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவையின் 108 அவசர ஊர்தி ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி குணசேகரன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அவசர ஊர்தி ஊழியராக மக்களின் உயிர்காக்கும் உன்னதப் பணியாற்றியும், தொழிலாளர் நலன் காக்கும் தொழிற்சங்கவாதியாகவும் இருந்த அன்புத்தம்பி குணசேகரன் அவர்கள் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, தொழிற்சங்கப் பேரவையின் 108 அவசர ஊர்தி ஊழியர்கள் சங்கத்தை ஒருங்கிணைத்து சிறப்பாகக் களப்பணியாற்றிவந்தவர்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் எனது பரப்புரை வாகன ஓட்டுநராகவும், உற்ற துணையாகவும் இருந்த தம்பி குணசேகரனை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
தம்பி குணசேகரனை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், தொழிற்சங்கப் பேரவையினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி குணசேகரன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஉத்தரப்பிரதேசத்திலுள்ள கியான்வாபி மசூதியின் வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் எனும்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதிக்குட்பட்ட…