முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சென்னை பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட…

0

சென்னை பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெதேல் நகரில் கழுத்தளவு மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகளில் சிக்குண்டு உணவு, உடை, குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் ஏதுமின்றியும், மின்சாரம் இல்லாமல் இருளிலும், நோயை உண்டாக்கும் கொசு மற்றும் நச்சு பூச்சிகளின் அச்சுறுத்தலிலும் கடந்த நான்கு நாட்களாக கொடுந்துயரில் தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை படகின் உதவியுடன் இன்று 07-12- 2023 மாலை நேரில் சந்தித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக தற்காலிக துயர் துடைப்பு உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், சமையல் மசாலா பொருட்கள், குடிநீர் போத்தல்கள், பிஸ்கட்கள் ஆகியவை அடங்கிய சிறு தொகுப்பை வழங்கி, ஆறுதல் கூறினோம்.

https://t.co/ArVraBoYa0

பெருவெள்ளப் பேரழிவில் இருந்து நம் மக்கள் மீண்டுவர, தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் ஓடோடி வந்து உதவிடுவோம்!

முந்தைய செய்திபெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள்…
அடுத்த செய்திபெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிடுவோம்! – சீமான் பேரழைப்பு