நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கா.சாரதிராஜா அவர்களின் தம்பியும், 'வின்' தொலைக்காட்சி செய்தியாளருமான அன்புத்தம்பி கோ.சிவசிதம்பரம் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
அன்புத்தம்பியை இழந்து வாடும் தம்பி சாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி சிவசிதம்பரம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



