திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் அன்புத்தம்பி அ.சங்கிலிபாண்டியன் அவர்களின் சகோதரர் அ.நாகராஜ் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்துமிகுந்த வேதனையடைந்தேன்.
தோளோடு தோளாகத் துணைநின்ற பாசமிகு சகோதரரை இழந்து வாடும் அன்புத்தம்பி சங்கிலி பாண்டியன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்பு சகோதரர் அ.நாகராஜ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


