முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள்…

0

என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

நவம்பர் 26, நம்முடைய தலைவர் பிறந்தநாள்!

'தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்தநாள்!' என்று உலகெங்கிலும் நாம் கொண்டாடி வருகிறோம்.

இம்முறை தலைவர் பிறந்தநாளினை நாம் தமிழர் கட்சி சென்னை – தாம்பரத்தில் கொண்டாடவிருக்கிறது.

இடம்: எல். சி. மகால் திருமண மண்டபம்,
திருநீர்மலை முதன்மைச்சாலை,
பம்மல், பல்லாவரம், சென்னை – 75

என் அன்பு உறவுகள் அனைவரும் உணர்வெழுச்சியோடு இவ்விழாவில் பங்கேற்று, மாபெரும் விழாவாக மாற்ற வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன். இதையே உங்களுக்கான அழைப்பாக ஏற்றுக்கொண்டு, மறக்காமல் மானத்தமிழரெல்லாம் கூடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும், வணக்கமும்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திஎதுவும் தானாக வருவதில்லை. நாம்தான் முயன்று பெற வேண்டும்! -…
அடுத்த செய்திதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சாதியக் கொடுமைகள் அதிகம் நிகழும் வன்முறைக்…