நாம் தமிழர் கட்சியின் வடசென்னை திருவொற்றியூர் மாவட்ட தமிழ் மீட்சிப் பாசறைச் செயலாளர் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய ஐயா ப.கோவிந்தசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
அன்னைத் தமிழே உயிர் மூச்சென வாழ்ந்து, தமிழ்த்தேசிய அரசியலே மொழியையும், மக்களையும் காக்கும் பேரரண் என்று உணர்ந்து,தனது முதுமைக் காலத்திலும் தளராமல் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, மொழி மீட்புக் களத்தில் தனது இறுதி மூச்சுவரை அயராது பங்காற்றி, இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த ஐயா கோவிந்தசாமி அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனவேதனையைத் தருகிறது.
ஐயாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா கோவிந்தசாமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


