நடத்துங்கள்..!
உங்கள் மேடை,
உங்கள் நாக்கு,
எது வேண்டுமானாலும் பேசுங்கள்!
உங்கள் பேனா,
உங்கள் அச்சகம்,
எது வேண்டுமானாலும் எழுதுங்கள்!
உங்கள் தராசு,
உங்கள் எடைக்கல்,
எதுவேண்டுமானாலும் விமர்சியுங்கள்!
உங்கள் சுவர்கள்,
உங்கள் காகிதம்,
எது வேண்டுமானாலும் ஒட்டுங்கள்!
உங்கள் வாத்தியம்,
உங்கள் கச்சேரி,
எது வேண்டுமானாலும் வாசியுங்கள்!
உங்கள் தூரிகை,
உங்கள் வர்ணம்,
எது வேண்டுமானாலும் வரையுங்கள்!
ஆனால், நாளை காலத்தின் விமர்சனம், உங்கள் பிணங்களைக் கூடத் தோண்டி எடுத்துவந்து தூக்கில் போடும்! என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.
நடத்துங்கள்..!
“திருத்தி எழுதிய தீர்ப்புகள்”
– ஐயா கவிப்பேரரசு வைரமுத்து


