திருவண்ணாமலை மாவட்டம், நாரையூர் கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கீழ்ப்பென்னாத்தூர் தொகுதிச் செயலாளர் அன்புத்தம்பி கோ.பிரபு அவர்களின் அண்ணன் சின்னதுரை அவர்களின் அன்புமகன் இரமணி கிருஷ்ணன் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
மண்ணையும், மக்களையும் நேசித்து, சிறுவயதிலேயே நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து, கட்சி நிகழ்வுகளில் துடிப்புடன் பங்கேற்று வந்த அன்புமகன் இரமணி கிருஷ்ணன் அவர்களை இழந்திருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
அன்பு மகனை இழந்து வாடும் தம்பிகள் சின்னதுரை, பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகன் இரமணி கிருஷ்ணன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


