முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

0

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பிராமணமங்கலம் ஊராட்சிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி பார்த்தீபன் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

தமிழ்த்தேசிய அரசியலின் மீதும், தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மீதும் கொண்ட பற்றுறுதி காரணமாக மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, தன்னலமற்று களப்பணியாற்றிவந்த தம்பியை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பி பார்த்தீபன் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி பார்த்தீபன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா? நாளும் பல நற்செய்திகள்…
அடுத்த செய்திமொழிப்போரை முன்னின்று நடத்திய பெருந்தகை! பேராசிரியர் நமது ஐயா சி.இலக்குவனார்…