முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மனிதனுக்கு மட்டும் இயற்கை கொடுத்த அரிய சீதனங்கள் இரண்டு; அவை…

0

மனிதனுக்கு மட்டும் இயற்கை கொடுத்த அரிய சீதனங்கள் இரண்டு; அவை சிரிப்பும், சிந்தனையும்!

எறும்பு போன்று யாரும் நமக்கு அறிவுரை கூற முடியாது; எறும்பு எதுவும் பேசுவதில்லை!

உழைக்கும் வயதில் உறங்க நேரிட்டால், உறங்கும் வயதில் நாம் உழைக்க நேரிடும்!

தன்னம்பிக்கையும், நேர்மையும் கொண்ட எந்த ஆணும் அழகன்தான்;
கனிவும், பணிவும் கொண்ட எந்தப் பெண்ணும் அழகுதான்!

இன்னொருவருக்கு வழிகாட்டுவதற்காக ஒரு விளக்கை ஏற்றினீர்களேயானால், உங்கள் வழியும் எளிதாகிவிடும்!

மற்றவர்கள் செய்யாததை இன்று நீங்கள் செய்தால், நாளை மற்றவர்களிடம் இல்லாதது உங்களிடம் இருக்கும்!

அழுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும்; சிரிப்பதற்கு லட்சம் காரணங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

ஆண்டுக் கணக்கில் கிடைக்காத அனுபவத்தை ஒரு மணி நேரத்தில் ஒரு நல்ல நூலைப் படிப்பதன் மூலம் பெற முடியும்!

முந்தைய செய்திசுங்கத்துறை பணித்தேர்வினை ரத்து செய்வதோடு, முறைகேட்டில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள் மீது…
அடுத்த செய்திதமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க,…