முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழரின் தொன்மங்களைத் தேடி ஆய்ந்தறிந்து சான்றுகளுடன்…

2

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழரின் தொன்மங்களைத் தேடி ஆய்ந்தறிந்து சான்றுகளுடன் நிறுவிய பெருந்தகை, தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடலியல் பேரறிஞர், ஐயா ஒரிசா பாலு அவர்களின் இறுதி நிகழ்வினை அரசு மரியாதையுடன் நடைபெறச் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

ஐயா ஒரிசா பாலு அவர்களது இறுதி நிகழ்வில் அரசு மரியாதை என்பது ஐயாவுக்கு பெருமை சேர்ப்பது மட்டுமன்று, அது தமிழ்நாட்டு அரசுக்கும், தமிழர்களுக்கும் வரலாற்றுப் பெருமை சேர்ப்பதாகும்.

@CMOTamilnadu @mkstalin

பழந்தமிழரின் தொன்ம வரலாற்றைத் தேடி தேடி பயணித்து ஓய்ந்த நமது பேரன்பிற்குரிய தொல்லியல் அறிஞர் ஐயா ஒரிசா பாலு அவர்களின் சென்னை கிருகம்பாக்கம் இல்லத்தில் நடைபெற்று வரும் இறுதி நிகழ்வில் நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்று ஐயாவிற்கு மரியாதை செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

முந்தைய செய்திதமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், உலகத் தமிழர்களால் ஒரிசா…
அடுத்த செய்திசுற்றறிக்கை: காவிரி நதிநீர் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டப விவரம்