கேரள மாநிலம், கொச்சி – களமச்சேரியில் உள்ள சாம்ரா சர்வதேச மாநாட்டு மையத்தில்
நடைபெற்று வரும் கிறித்துவ மத மாநாட்டில் இன்று (அக்.29) காலை ஜெபக்கூட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் ஒருவர் பலியானதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். மதவெறியுடன் மனித உயிர்களை பலி கொண்டுள்ள இக்கொடும் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களையும், அதன் பின்னணனியில் உள்ளவர்களையும் விரைந்து கைது செய்து மக்களிடம் ஏற்பட்டுள்ள பயத்தையும், பதற்றத்தையும் தணிக்கவும், கேரளாவில் மீண்டும் அமைதி திரும்பிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேரள மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

