குவைத் செந்தமிழர் பாசறை – நினைவேந்தல் கூட்டம்

84

குவைத் செந்தமிழர் பாசறை முன்னெடுத்த மே18 தமிழின அழிப்பு நாளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று 19.05.2023 அன்று மங்காப் உள்ளரங்கத்தில் 130 தமிழ் உறவுகளுடன் பேரெழுச்சியுடன் நடந்து முடிந்தது.

மகளிர் பாசறைத் தலைவி திருமதி. சித்ரா தேவி, செயலாளர் திருமதி.வயலெட் சுகந்தி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறைத் தலைவர் திரு. வினோத் ஆகியோரின் மேடை ஒருங்கிணைப்பில்,
# மாணவர் பாசறை செல்வன் கிசோர் கண்ணன், அகவணக்கம், வீரவணக்க உறுதிமொழியுடன் நினைவேந்தல் கூட்டம் தொடங்கியது.
# நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இறுதி கட்டப் போரில் உயிரிழந்த நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு மலர் வணக்கம் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
# அதனைத் தொடர்ந்து செந்தமிழர் பாசறையின் செயலாளர் திரு. க.செந்தில் அவர்களால் இன எழுச்சி வீரவணக்க உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
# செந்தமிழர் பறையிசைக் குழுவினரின் பறையிசை, அரங்கம் அதிர முழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கீழ்காணும் தலைப்புகளில் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பல கருத்துகளை வரலாற்றுச் சான்றுகளினூடாக பகிர்ந்து கொண்டனர்.
# ஈழத்தின் தொல்குடிகள் தமிழர்களே – இலக்கிய வரலாற்றுச் சான்றுகள் சொல்லும் உண்மை.
திரு. சித்தார்த்தன்.
(இணையதளப்பாசறை துணைச்செயலாளர்).
# ஈழத் தந்தை செல்வா – அகிம்சை அரசியல் போராட்டமும், அதன் தோல்வியினால் ஏற்பட்ட விளைவுகளும்
திரு. கல்யாண முருகேசன்
(பாசறைப் பொருளாளர்)
# ஆயுதப் போராட்டமாக மாறிய அமைதிப் போராட்டம் – தமிழர்களின் மீது திணிக்கப்பட்ட தவிர்க்க முடியாத போர்.
திரு. மகேந்திரன்
(தெற்கு மண்டல துணைச் செயலாளர்)
# புலிகள் எனும் தமிழ்ப்பேரரண் – இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றியமையாமை
திரு. முகமது அலி
(ஆன்றோர் அவையத் தலைவர்)
# இந்தியத்தின் ஈழம் சார்ந்த நிலைப்பாடு – அன்றும் இன்றும் என்றும்
திருமதி. வயலட் சுகந்தி
( மகளிர் பாசறைச் செயலாளர்)
# ஈழம் இனி – நமது இலக்கை அடையத் தடைகளாய் நிற்கும் அக புற சிக்கல்களும், தீர்வுகளும்!
திரு. அருண் தெலெஸ்போர் (வளைகுடா செய்தித்தொடர்பாளர்)
# அனைத்துலகமும் தமிழரை அழிக்க ஒத்துழைத்தது ஏன்? – வளச்சுரண்டல் அரசியலின் கொடூர முகம்!
 திரு. தமிழன் ரகு
( பாசறைத் தலைவர்)
# கொன்றொழிக்கபட்ட தொல்லினம் – இறுதிகட்ட இனப்படுகொலை எனும் பேரூழி! கவிதை.
திரு. கவிச்செல்வம்.
( ஆன்றோர் அவையச் செயலாளர்)
# திருமதி ராதிகா தாசன் மற்றும்
திரு. கேசவன் ஆகியோரின் இன எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக நடந்தது.
# மழலையர் பாசறையின் செல்வன் லோகசுதன் இன எழுச்சிக் கவிதை பாடினார்கள்.
மற்றும் மாத்தமிழ் மன்றத்தின் நிறுவனர் திரு. சத்யன் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.
நிகழ்வில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.
அண்ணன் சீமான் அவர்களின் கட்டளைப்படி புதிய உறுதி ஏற்பு
திரு. கல்யாண முருகேசன் அவர்கள் வாசிக்க அரங்கம் நிறைந்த உறவுகள் அனைவரும் இதயத்தில் கைவைத்து உறுதி ஏற்றனர்
நிகழ்வின் கடைசியாக திரு. தமிழன் ஜார்ஜ் ( பாசறை துணைச் செயலாளர்) அவர்களின் நன்றியுடன் நிகழ்வு முடிந்தது.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் இன உணர்வுடன் கலந்து கொண்ட அனைவருக்கும், இந்நிகழ்வு சிறக்க கடினமாக உழைத்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகளும் பேரன்பும்.